Tuesday, December 22, 2009

மாதங்களில் அவள் மார்கழி.....

போன வாரம் அம்மா கூட பேசிண்டு இருக்கும்போது அம்மா சொன்னா - " நாளைலேர்ந்து மார்கழி மாசம்.. தினமும் திருப்பாவை, திருவெம்பாவை சொல்லு.." ஒடனே எனக்கு முன்னாடி ஒரு mosquito coil... அதான்.. Flashback... நான் school படிக்கும்போதுலாம் மார்கழி மாசம் ரொம்ப special எனக்கு.. அதுக்கு நெறய reasons-உம் இருக்கு -

1) School Half yearly vacations- நான் school-லாம் திருச்சி-லெ படிச்சேன்.. அப்ப வந்து எங்க வீடு, சித்தி வீடு அப்பறம் சித்தப்பா வீடு எல்லாம் ஒரே Street-லெ தான் இருந்துது. Weekends and holidays-னா எல்லா cousins-உம் சேந்து ஒரே கும்மாளம் தான்... அதுல நானும் என் சித்தி பொண்ணு பாரதியும் சேந்து புதுசா ஏதாவது சமைக்கறோம் அப்டினு சொல்லி, எல்லாரயும் ரொம்ப படுத்துவோம்... அத பத்தி தனியா ஒரு post போடறேன். (அவ்ளோ இருக்கு.. :D)

2) காத்தால சீக்கிரம் எழுந்து வாசல்-லெ பெரிய ரங்கோலி போடறது - அதுக்குலாம் அப்பொ பெரிய போட்டியே நடக்கும். யார் வீட்டுல பெரிய கோலம் போட்ருக்கா, யார் கலர் நெறயா use பண்ணிர்க்கா,அப்டின்னு.. பக்கத்து வீட்டுல 20 புள்ளி கோலம் போட்டா, நாம atleast ஒரு 21 புள்ளி கோலமாவது பொடனும். அப்பறம் அவங்க கிட்ட போயி, "ஓ!! உங்க வீட்டுல 20 புள்ளி கோலமா.. எங்க வீட்டுல 21 புள்ளியாக்கும்.." அப்டின்னு பெரும பீத்திக்கறதுல ஒரு அல்ப சந்தோஷம் :-). மார்கழி மாசம் ஆரம்பிக்கரதுக்கு முன்னாடியே நான் அம்மா-வ நச்சரிச்சு கலர் பொடி-லாம் வாங்கி கலந்து வெச்சு, மார்கழி மாசம் ஒன்னாம் தேதி எப்ப வரும்-னு காத்துண்டு இருப்பேன்.

3) Daily visits to the temple - இத படிச்ச உடனே ஏதோ நான் பெரிய பக்திமான்.. கோவிலுக்கு போறதுன்னா அவ்ளோ புடிக்கும்னுலாம் நெனச்சுக்காதீங்க. அது என்ன விஷயம்-னு சொல்றேன் - நான், நிர்மல், அப்பறம் என்னோட cousins பாரதி, ப்ரஸன்னா, ராஜாஜி and விஜய் + கொஞ்சம் neighbourhood kids எல்லாரும் சேந்து காத்தால 5:30-க்கு கோவிலுக்கு கெளம்புவோம்... எல்லாரும் ஒரு sweater, monkey குல்லா/muffler எல்லாம் போட்டு கொள்ளை அடிக்க போற மாதிரியே போவோம்.. கொவிலுக்கு பொயி கொஞ்சம் பஜனை பாட்டு - அதுல 2 groups இருக்கும் - Ladies group and Gents group.. அதுல எந்த group சத்தமா பாடறாங்க அப்படின்னு ஒரு சின்ன போட்டி.. கொசு தொல்லை வேற மார்கழி மாசத்துல கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கும் (courtesy: stagnant water due to incessant rains during October and November).. So, பஜனைக்கு தாளம் போடற சாக்குல கொசுவ அடிச்சுண்டே பஜனை பாடி முடிச்சா.. ப்ரசாதம் தருவா கொவில்-லே... Fridays are extra special- சக்கர பொங்கல் கடைக்குமே.. மார்கழி மாச குளுருக்கு சூடா நெய் ஒழுக இருக்கற பொங்கல அந்த குட்டி தொண்ணைலேர்ந்து சாப்பட்றது இருக்கே.. Wow!! இப்படியாக கோவில்லே கொஞ்சம் பஜனை கொஞ்சம் ப்ரசாதம்-னு முடிச்சுட்டு வீட்டுக்கு வர வழில... நேர் வழி எடுக்காம, சுத்து வழி எடுப்போம். அந்த வழிலே 2-3 emplty plots இருக்கும். அதுலாம் full-ஆ தண்ணி ரொம்பி இருக்கும் (courtesy: The same rains). அதுல நெறய குட்டி குட்டி மீன், நண்டு, tadpoles, snails எல்லாம் இருக்கும். அதெல்லாம் ஆராய்ச்சி பண்ணுவோம். அந்த marine life research-லாம் முடிச்சுட்டு வீட்டுக்கு வரதுக்கே ஒரு 8:30 மணி ஆகிடும்.

Mosquito coil again.. Back to present.. "சரிம்மா.. திருப்பாவை, திருவெம்பாவை தானே.. Net-லெ இருக்கு.. பாத்து சொலிட்றேன்.." (School படிக்கும்பொது திருப்பாவை திருவெம்பாவை-லாம் எனக்கு மனப்பாடமா தெரியும்.. அந்த season-லெ அதுக்கு நெறய competitions-லாம் கூட நடக்கும்... அதுலலாம் கலந்து நான் நெறய prize-லாம் வாங்கிர்கேனாக்கும்.. அப்டினு ஒடனே ஒரு அண்ட புளுகு புளுக மாட்டேன்... :D)

P.S: என்னமொ தெரில, இந்த blog பேசர நடை-லே எழுதணும்-னு தோணித்து.. தமிழும் English-உம் கலந்து கலந்து எழுதிர்கேன்.. தமிழ் விசுவாசிகள் கொஞ்சம் மன்னிக்கணும்... :-))

For those who can't read Tamizh fonts -
Title: MaadhanGgaLil avaL maargazhi.....
pOna varam ammaa koda pesindu irukumbOdhu amma sonna - " NaaLaileNdhu maargazhi maasam.. dhinamum thiruppaavai, thiruvempaavai sollu.." odaNe enakku munnaadi oru mosquito coil... adhaan.. flashback... Naan school padikkumbOdhulam maargazhi maasam romba special enakku.. adhukku NeRaya reasons-um irukku -
1) School half yearly vacations - Naan school-lam Tiruchchi-le padichen.. appa vandhu enGga veedu, chiththi veedu appaRam chiththappaa veedu ellam orE street-le dhan iruNdhudhu. Weekends and holidays-naa ella cousins-um sENdhu orE gummaaLam dhaan... adhula Naanum en Chiththi poNNu Bhaarathiyum sENdhu pudhusaa edhaavdhu samaikkarom apdinu solli, ellaarayum romba paduththuvom... adha paththi thaniyaa oru post pOdrEn. (AvlO irukku.. :D)
2) Kaaththala seekkiram ezhuNdhu vaachal-le periya rangoli pOdradhu - adhukkulaam appo periya pOttiyE nadakkum. Yaar veettula periya kOlam pOtrukaa, yaar kalar NeRayaa use pannirkkaa,apdinnu.. pakkaththu veettula 20 puLLi kOlam pOtta, naama atleast oru 21 puLLi kOlamaavdhu podanum. AppaRam avanga kitta pOi, "O!! unGga veettula 20 puLLi kOlamaa.. enGga veettula 21 puLLiyaakkum.." apdinnu peruma peeththikaRadhula oru alpa ChandhOsham :-). Maargazhi maasam aarambikkaradhukku munnaadiye Naan ammaa-va Nachcharichchu kalar podi-laam vaanGgi kalaNdhu vechchu, maargazhi maacham oNNaam thEdhi eppa varum-nu kaaththuNdu iruppen.
3) daily visits to the temple - idha padichcha udanE EdhO Naan periya bhakthimaan.. kOvilukku pOradhunna avlo pudikkumnulaam nenachchukkadheenga. Adhu enna vishayam-nu solren - Naan, Nirmal, apparam ennOda cousins Bhaarathi, Prasannaa, Rajaaji and Vijay + konjam neighbourhood kids ellarum sENdhu kaaththaala 5:30-kku kovilukku kaLambuvOm... ellarum oru sweater, monkey kulla/muffler ellam potu koLLai adika pora madhiriye povom.. kovil-kku poi konjam bhajanai paattu - adhula 2 groups irukkum - ladies group and gents group.. adhula endha group saththamaa paadaraanGga appadinnu oru chinna pOtti.. kosu thollai vEra maargazhi maasathula konjam jaasthiyaa irukkum (courtesy: stagnant water due to incessant rains during October and November).. So, bhajanai-ku thaaLam pOdara saakkula kosuva adichchuNdE bhajanai paadi mudichcha.. prasaadham tharuvaa koville... Fridays extra special - chakkara ponGgal kadaikkume.. maargazhi maasa kuLurukku choodaa Nei ozhuga irukkaara ponGgala andha kutti dhoNNai-lerNdhu sapadradhu irukkE.. wow... ippadiyaga koville bhajanai konjam prachaadham konjam-nu mudichchuttu veettuku vara vazhila... NEr vazhi edukkaama, suththu vazhi eduppom. Andha vazhile 2-3 empty plots irukum. Adhulaam full-a thaNNi rombi irukkum (Courtesy: The same rains). Adhula NeRaya kutti kutti meen, NaNdu, tadpoles, snails ellam irukum. Adhellam aaraichi paNNuvOm. Andha marine life research-lam mudichchuttu veettuku varadhukke oru 8:30 maNi aagidum.
mosquito coil again.. back to present.. "sarimma.. Thiruppaavai, thiruvempaavai dhane.. net-le irukku.. paaththu solidren.." (School padikkumbodhu thiruppaavai thiruvempaavai-lam enakku manapaadamaa theriyum.. andha season-le adhukku NeRaya competitions-laam kooda nadakkum... adhulalaam kalandhu Naan NeRaya prize-laam vaangirkEnaakkum.. apdinu odane oru anda puLugu puLuga maaten... :D)
P.S: Ennamo therila, indha blog-i pesara nadai-le ezhudhanum-nu thoniththu.. tamizh-um english-um kalandhu kalandhu ezhudhirken.. tamizh visuvasigal konjam mannikanum... :-))

5 comments:

Priya_skp said...

Very nice prashanthi.. tamil la kalakitte.. chinnda rendu moonu spelling mistakes.. enna vida evalavo better tamil though.. ;) but more than that u reminded those memorable childhood days in everyone who would read this..

Elango said...

Nice post prashanthi.. enakku kooda memories laam gnabagam varudhu.. kalaila naalu maniku kovil ponadhu.. bakthi thazhumba bajana padunadhu..thirupavai laam manapadama therinji vachi enga ponalum prize vanganadhu.. those were golden days!!

Mekala Chandrasekaran said...

Hey Prashanti,

Nice post ;) Adhuvum tamizhla sooper :) I have had similar experiences. Indha post padikkumpodu enakkum mosquito coil suthuchu ;) Nostalgia strikes hard. Good old days :)

Unknown said...

படிச்சதுல எல்லார் மாதிரியும் எனக்கும் அருணா வுக்கும் கொசு வத்தி சுத்திச்சு. அங்க அங்க நிறைய சொற் குற்றம் :) ஆனால் அதை மன்னிச்சுடலாம். கடைசி வரியில யாரையோ குத்திக் காமிக்கிற மாதிரி இருக்கு..... :D ..

sathyaravi said...

super... bhajanai padindu theruvu theruva oorvalunlam kooda povemmey....ninaithaley inikkum!!!